சனி, ஜனவரி 08, 2011

உசிரோ .......உசிரு



# நம்ம சமூகம் நசிஞ்சு கெடக்குது
  போராட வேணுமின்னு போனாக அவுக.
  இரும்பு போல இருந்த மவராசா
  அடிக்கு பயந்து ஆத்துல விழுந்தாக.
  சங்க ஆபீஸில சட்டம் போட்டு தொங்குது
  அவுக படம் !


# தலைவருக்கு தண்டனை
  தந்தாகன்னு சொல்லி
  பத்த வச்சுகிட்டு  பரிதவிச்சு செத்தான்
  தவமிருந்து பெத்த தங்க மகன். 
 "தியாகியை பெத்த தாயே"ன்னு சொல்லி
  ஆறுதல் வார்த்தையும்
  அஞ்சாயிரமும் தந்துபுட்டு
  காரில ஏறிட்டாரு கட்சித் தலைவரு !


# காலேசில் படிச்ச கடைக்குட்டி மகளை
   பஸ்சோடு வச்சு பொசுக்குனாக சிலபேரு.
   இரக்கப்பட்டு வந்தாக எதிர்க்கட்சிகாரவுக.
   போட்டோ எடுத்துக்கிட்டு போனவுக
   ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி
   ஓட்டு கேட்டாக!


# ஒப்புரான சத்தியமா
   உளமார சொல்லுறேன்
   கொன்னு போட்டுப்புட்டு
   கொடியைக் கட்டலாம்.
   உசுரோட  எரிச்சுப்புட்டு
   ஓட்டு கேட்கலாம்
   செத்தபிறகு சிலையா வைக்கலாம்.
   யாருக்காவது வேணுமின்னா சொல்லுங்க
   ஒண்ணுக்கும் உதவாம
    உசிரு ஒண்ணு இருக்குது.
      
                                                   -சிவகுமாரன்  
(இது மீள்பதிவு. பதிவுலகில் நுழைந்த புதிதில் இடுகையிட்டது. அதிகம் கவனிக்கப்படாததால் மீண்டும் இந்த ஏலம்.)

45 கருத்துகள்:

ராஜவம்சம் சொன்னது…

சுடுகிறது கவிதை வரிகள்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ராஜவம்சம்

தினேஷ்குமார் சொன்னது…

அவரவர் சுயத்திற்கு பலியாக உத்தரவின்றி உள் நுழைந்து வாசம் பிடித்து நகர்வதர்க்குள் விருட்டென விழும் சத்ருவின் ஆவேச தாக்குதலில் பலியாகும் ஆடுகளாய் வீதியெங்கும்............

சிவகுமாரன் சொன்னது…

பின்னூட்டக் கவிதை அருமை தினேஷ்குமார். நன்றி.

Chitra சொன்னது…

உண்மை சுடுகிறது... :-(

வினோ சொன்னது…

நெருப்பை உணர முடிகிறது...

pichaikaaran சொன்னது…

மீள்பதிவு செய்தமைக்கு நன்றி

Philosophy Prabhakaran சொன்னது…

மூணாவது கவிதை அருமையாக இருந்தது... மனதை கனக்கச் செய்தது...

Unknown சொன்னது…

உள்ளம் சுடும் வரிகள்.

ஆனந்தி.. சொன்னது…

கன்னத்தில் அடிச்ச மாதிரி ஒரு சுரீர் வரிகள்!

test சொன்னது…

அருமையான வரிகள்!

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

//சங்க ஆபீஸில சட்டம் போட்டு தொங்குது அவுக படம்//

எவ்வளவு வருடம் கழிந்தும் மீள்பதிவு செய்யத்தக்க மாறாத நிஜங்கள்..

G.M Balasubramaniam சொன்னது…

முதலிரு கவிதைகள் அறியாமையின் விளைவு;மூன்றாம் கவிதை அகங்காரத்தின் விளைவு; கடைசி கவிதை இயலாமையின் வெளிப்பாடு என்று அழகாக செதுக்கியிருக்கிறீர்கள். உங்கள எழுத்தின் வீரியம் அன்றே இருந்திருக்கிறது. வாழ்த்துக்கள்

வசந்தா நடேசன் சொன்னது…

உண்மைகள், சுட்டாலும்! வாக்காளர்கள் திருந்தவேண்டும்...

சிவகுமாரன் சொன்னது…

விருதுக்கு ரொம்ப நன்றிங்க தோழி பிரஷா .

சிவகுமாரன் சொன்னது…

நன்றி.சித்ரா, வினோ, பார்வையாளன், பிலாசபி பிரபாகரன், கலாநேசன், ஆனந்தி, ஜி, திரு.பழனிசாமி, & வசந்தா நடேசன்
உங்கள் அனைவரின் தொடர் வருகைக்கு நன்றி.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி.GMB சார் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். மிக்க நன்றி.

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

//யாருக்காவது வேணுமின்னா சொல்லுங்க
ஒண்ணுக்கும் உதவாம
உசிரு ஒண்ணு இருக்குது// உருக்கும் வரிகள். அருமை.

THOPPITHOPPI சொன்னது…

எழுத்தில் கிராமத்து வாசம்

arasan சொன்னது…

வலிகளை அப்படியே கவிதை வடிவில் அழகாய் கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க

Priya சொன்னது…

அருமையான வரிகள்!

ஸ்ரீராம். சொன்னது…

//" யாருக்காவது வேணுமின்னா சொல்லுங்க
ஒண்ணுக்கும் உதவாம
உசிரு ஒண்ணு இருக்குது."//


வாங்க விலையைப் பேசிக்கலாம்...!

ஒரு மாதிரி சூடான கவிதைகளாகவே எழுதறீங்க சிவா...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சுடும் வரிகள்.

அன்புடன் நான் சொன்னது…

வலிகள் நிறைந்த செறிவான கவிதை.....பாராட்டுக்கள்.

ஆயிஷா சொன்னது…

சூடான கவிதை வரிகள்.வாழ்த்துக்கள்.

பத்மநாபன் சொன்னது…

அந்த நிகழ்ச்சியின் தாக்கத்தை மேலும் சூடாக்கியது உங்கள் கவிதை..

இந்த விழிப்புணர்வு குறையாமல் எல்லோர் மனதிலும் இருந்தால் தான் கொஞ்சாமாவது அஞ்சுவர் கொலைகார பாவிகள்..

அந்த சமயத்தில் பார்த்திபன் எழுதிய ஒரு வரி விகடனில் வந்திருந்தது

சட்ட புத்தகங்களை வேண்டுமென்றால் எரித்து விடுங்கள்..பூக்களை எரிக்காதீர்கள்

Vasu சொன்னது…

வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டில் நடக்கும் அவலங்களை அருமையாக வர்ணித்து உள்ளேர்கள். சரியான சாட்டை
அடி . வாசுதேவன்

அப்பாதுரை சொன்னது…

எனக்கு மிகவும் நெருங்கிய இலங்கை நண்பரின் குடும்பக்கதை நினைவுக்கு வந்தது.. 'பேசாம இடுப்புல குண்டைச் சுத்திகிட்டு எவன் மேலயாவது மோதிடவானு பாக்குறேன்' என்றார்.

சென்னை பித்தன் சொன்னது…

//யாருக்காவது வேணுமின்னா சொல்லுங்க
ஒண்ணுக்கும் உதவாம
உசிரு ஒண்ணு இருக்குது.//
வேதனை நிறைந்த வார்த்தைகள்.
நெஞ்சைச் சுடும் உண்மை.
அருமை!

ஹேமா சொன்னது…

எங்களுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த முத்துக்குமார் அவர்களின் ஞாபகம் வருகிறது.இது உதவாத உயிர் அல்ல சிவகுமாரன்.இருந்து சாதிக்க நிறையவே இருக்கிறது. இறந்துவிட்டால் நீங்கள் சொன்ன மாலையும் போஸ்டரும்தான் !

Meena சொன்னது…

உயிர் சிலருக்கு மலிவாகத் தெரிகிறது. இந்த நிலை என்று மாறுமோ?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவிதையில் சொல்லி இருக்கும் நிஜம் சுடுகிறது நண்பரே.. இவர்கள் திருந்துவார்கள்?

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் வித்யாசம் பாக்காம ஒத்துமையா நிக்கிறது பிணத்தைப் போட்டு ஓட்டுக் கேக்குறதுலதான் சிவா.

அதையும் சாடினா எப்பிடி சிவா?

Nagasubramanian சொன்னது…

//யாருக்காவது வேணுமின்னா சொல்லுங்க
ஒண்ணுக்கும் உதவாம
உசிரு ஒண்ணு இருக்குது.//
superb!

Matangi Mawley சொன்னது…

enna solvathendru puriyavillai! oru sila vishayangal "coffee table chat"-aaka irukkindrana. aanaal, athai anubavippavarkal mattume unarakkodiya vali, pechchil therivathillai. varuththam, vaarthaigalodu nindruvidukirathu... "coffee table" koottu kalaintha pinnar marainthu vidukirathu...

ungal varukalin vali vaarthaikalodu nirkkavillai... ennangalodu kalanthu vittathu! solla mudiyavillai ennaal ingu. anubavam mattume, ennudan...

ithuvum maarumo...?

முல்லை அமுதன் சொன்னது…

nalla kavithai.
vaazhthukkal.
mullaiamuthan

சிவகுமாரன் சொன்னது…

நன்றி கனாக்காதலன், தொப்பிதொப்பி, அரசன், ப்ரியா, ஸ்ரீராம், வெறும்பய, கருணாகரசு, ஆயிஷா, பத்மநாபன், வாசு, அப்பாதுரை, சென்னைப்பித்தன், ஹேமா, மீனா, வெங்கட் நாகராஜ், சுந்தர்ஜி, நாகா, மாதங்கி, முல்லை அமுதன்,
அனைவருக்கும் நன்றி.
என்னோடு சேர்ந்து வலியை உணர்ந்ததற்கும், உணர்ந்ததை உணர்த்தப் போவதற்கும்.

சிவகுமாரன் சொன்னது…

ஹேமா சொன்னது.....

\\\எங்களுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த முத்துக்குமார் அவர்களின் ஞாபகம் வருகிறது.இது உதவாத உயிர் அல்ல சிவகுமாரன்.இருந்து சாதிக்க நிறையவே இருக்கிறது. இறந்துவிட்டால் நீங்கள் சொன்ன மாலையும் போஸ்டரும்தான் !///

இது இந்த தேசத்தின் வலி. உங்கள் வலியை உணரவும் ,உணர்த்தவும் முயல்கையில் என் தமிழும் தடுமாறுகிறது சகோதரி.
இது போன்ற அபலை பெண்கள் இங்கு ஏராளம். இந்த அரசாங்கம் அவர்களுக்கு இலவசங்களை கொடுத்து ஓட்டு போடும் இயந்திரங்களாய் மாற்றி உயிருடன் வைத்திருக்கின்றன. என்ன செய்ய முடியும் அவர்களால். அப்பாத்துரையின் நண்பர் சொன்னது போலவா?

சிவகுமாரன் சொன்னது…

ஸ்ரீராம் சொன்னது

//ஒரு மாதிரி சூடான கவிதைகளாகவே எழுதறீங்க சிவா.../////

என்ன செய்வது நண்பரே.இது போன்ற கவிதைகளை எழுதும் சமயங்களில் இயல்பாகவே நான் கொஞ்சம் சூடாகவும் சோகமாகவும் இருப்பதாக என் மனைவியும் சொல்கிறாள்.

அடுத்து, கொஞ்சம் ஜில்லுன்னு எழுதுனாப் போச்சு.

ரிஷபன் சொன்னது…

அது எப்படி ஒண்ணுக்கும் உதவாத உயிர் ஆகும்?

vasan சொன்னது…

உயிரின் விலை. அர‌சிய‌லின் அடி தொடும் க‌விதை.

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக நன்று.

கோநா சொன்னது…

எளிய தாயின் மொழியில், வலிய உண்மைகள். விருதுக்கு வாழ்த்துக்கள்

goma சொன்னது…

அடேங்கப்பா!!!!
கெமிஸ்ட்ரி படித்த உங்களுக்கும் தமிழ் எழுத்துக்கும் இடையே கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க் அவுட் ஆனது......
யார் அந்த கிரியா ஊக்கி...
..
கொஞ்சம் விண்ணையும் வெண்ணிலாவையும் எழுதி கூல் ஆகுங்கள்...சோட்டா சா பிரேக் வேண்டாமா...
இப்படியே வார்த்தகளில் தணல் புகுந்தால் மனமும் தகித்துக் கொண்டே இருக்கும் ...
என் சொந்த நொந்த அனுபவம்...

சிவகுமாரன் சொன்னது…

நன்றி மேடம்.
கிரியா ஊக்கி... மதுரரைக்குப் புலவனாய் வந்து தர்க்கம் செய்து தமிழாய்ந்த எனையாளும் என் அப்பன் சிவன் தான்.

போதைப்பொருள் படிக்கவில்லையா ?