சனி, அக்டோபர் 30, 2010

ஏக்கம்

எங்க ஊரு
எக்ஸ் எம்.எல்.ஏ.வை
வெட்டி சாச்சுப்புட்டாக
விரோதிக சிலபேரு.


காரு பஸ்சு ஓடலை  
கடை கண்ணி தெறக்கலை
நாலு நாளா
நாறிப் போச்சு பொழப்பு.


வியாபாரம் இல்லாத
விரக்தியில இப்படி
காய்கறி கடை
கண்ணம்மா புலம்பினா.


"எங்களுக்கும் கெடச்சிருக்கும்
இடைத்தேர்தல் அதிர்ஷ்டம்.


காலையில் எழுந்திருச்சி
கண் முழிச்சு பாத்தா
கதவிடுக்கில சொருகிருக்கும்
கரன்சி நோட்டு.


 மாறி மாறி
மந்திரிக வருவாக.
ஆரத்தி எடுத்தாலே  
ஆயிரம் ரெண்டாயிரம்.


குண்டு குழி ரோடு
கும்மிருட்டு வீடு.
காத்து வரும் குழாயி
காவு வாங்கும் பாலம்
பூச்சி தின்ன பருப்பு
புழு நெளியும் அரிசி
எல்லாமே நொடியில்
இல்லாமே போகும்.
மாயாஜாலம் மாதிரி
மாறிப்போகும் எல்லாம்.

நெனச்சாலே மனசு
நெறைஞ்சிருக்கு முழுசா.

 பாவி மனுஷன்
பதவியில இருந்தப்பவே
கொன்னுருக்கக் கூடாதா
கொலைகாரப் பயலுக.

                       -சிவகுமாரன்.

14 கருத்துகள்:

 1. உணர்வுகள் தெறிக்கிறது வார்த்தைகளில் . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

  பதிலளிநீக்கு
 2. கவிதை அருமை. ஆனால் இந்த காய்கறி கடை அம்மா போல நாம் (வாக்காளர்கள்) இருப்பதால் தான், நம் நாட்டின் முன்னேற்றம் தடைப் படுகிறது.

  பதிலளிநீக்கு
 3. இன்றய அரசியல் சூழலை அப்படியே கண் முன்னே நிறுத்துகிறீர்கள்.

  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. so....what we expect from our MLA / MP is....

  "Do or Die" :-)

  பதிலளிநீக்கு
 5. அநியாயமாய் ஒரு கொலையை நியாயப்படுதிவிட்டீர்களே . ஒரு கவிஞருக்கு இது அழகா?

  பதிலளிநீக்கு
 6. யாராலும் தடுக்கமுடியாத அவலங்களாகிப்போனது பொழப்பு.எழுத்துக்கள் மட்டுமே இன்னும் ரோஷத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. அது எல்லாவற்றையும் மறு உருவாக்கித்தரும்.அதற்கான விதைகள் இந்த கவிதைகள்.அசத்தலா இருக்கு சிவகுமார்.

  பதிலளிநீக்கு
 7. நன்றி சங்கர் , ராம்ஜி. நிகழ்காலத்தில், எல்.கே. மற்றும் காமராஜ்.

  இளமுருகனின் பின்னூட்டங்கள் கூட
  கவிதைகளாய் இருக்கின்றன.
  தமிழில் எழுதினால்
  சுவையாக இருக்கும்.

  நண்பர் இராமசாமி,
  அது கொலையல்ல, பழி வாங்கல்.
  அவர் தூக்கிய ஆயுதம் தான்
  அவரையும் தூக்கியது.

  பதிலளிநீக்கு
 8. அவனுக்கு காலம் க‌ட‌ந்து கால‌ன் வந்த‌தால்,
  தொகுதிக்கு இடைத்தேர்த‌ல் அதிர்ஷ்ட‌மில்லை.
  இருந்தும், இற‌ந்தும் ஒன்னும் செய்யாத‌ பாவிப் ப‌ய‌.
  க‌விதை தீயாய் தகிக்கிற‌து
  இடைத்தேர்த‌ல் சூத்திர‌த்தை.

  பதிலளிநீக்கு
 9. நன்றி வாசன் சார்.
  தேடிப் பிடித்து படித்ததற்கு.

  பதிலளிநீக்கு