திங்கள், நவம்பர் 01, 2010

ஹைகூ கவிதைகள் 25

வீணாய்ப்போகிறது மழை.
குறுக்கும் நெடுக்குமாய்
அம்மா.


கல்லெறிந்து நிலவை
காயப்படுத்தியது யார் ?
நீருக்குள் நிலவு.


கொட்டித்தீர்க்கும் மழை.
கும்மாளமிடலாம் குஷியாய்
அம்மா ஊருக்கு.


சாலையில் விபத்து
வேண்டிக்கொண்டது மனம்.
தெரிந்தவராய் இருக்கக்கூடாது.

தாடி வளர்த்த தாத்தா
பிடித்திழுக்கும் பேரன்.
ஆலவிழுதில் குரங்கு.

                      -சிவகுமாரன்

9 கருத்துகள்:

 1. சாலையில் விபத்து
  வேண்டிக்கொண்டது மனம்.
  தெரிந்தவராய் இருக்கக்கூடாது.]]

  நிதர்சணம்

  பதிலளிநீக்கு
 2. அனைத்து கவிதைகளும் மிக அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. அருமையான யதார்த்தமான வார்த்தைகளை வைத்து புனையப்பட்ட உங்கள் கவிதைகளுக்கு தலை வணங்குகிறேன்

  பதிலளிநீக்கு
 4. நன்றி ஜமால், எஸ்.கே, மற்றும் நட்புடன் நண்பா.

  பதிலளிநீக்கு
 5. //வீணாய்ப்போகிறது மழை.
  குறுக்கும் நெடுக்குமாய்
  அம்மா//
  சூப்பர் நண்பா! :-)

  பதிலளிநீக்கு
 6. கவிதைகள் நல்லா இருக்கு சிவகுமாரன் ..
  ஆமா நீங்க chemistrya கவிதைகள்ல தான் காட்டுவீங்களோ?

  பதிலளிநீக்கு
 7. நன்றி தாரிசன், உங்கள் முதல் வருகைக்கு.
  ஆமாம் Lecturer sir.
  Chemistry வயித்துக்கு
  கவிதை மூச்சுக்கு

  பதிலளிநீக்கு
 8. உங்களது ஹைக்கூ கவிதைகள் மிகவும் நன்று. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 9. #சாலையில் விபத்து
  வேண்டிக்கொண்டது மனம்.
  தெரிந்தவராய் இருக்கக்கூடாது.#

  கவிதை அருமை...

  பதிலளிநீக்கு