ஞாயிறு, டிசம்பர் 05, 2010

இந்தாய்யா தாலி

  

(குடிகாரனும் அவன் மனைவியும்)
            
               ( வெண்பா )

ஏண்டி கடங்காரி எங்கேடி காசுவச்சே
நாண்டி ஒழைச்சிருக்கேன் நாமுழுக்க- தோண்டி
முழியை எடுத்துருவேன் மொத்தமும்  தல்லே
புழிஞ்சு எடுத்துருவேன் போட்டு,

ஒழச்சாக ளாமுல்ல , ஒப்புரான நாந்தேன்
களையெடுத்து சேத்துருக்கேன் காசு - ஒழைக்காம
நீதின்ன சோத்துக்கும் நீபோட்ட தண்ணிக்கும்
பீதின்னப் போகலாம் போ......

அடியே சிறுக்கிமவ ஆரையடி சொன்னே
முடிய புடிச்சிழுத்து மோதி - அடிச்சேநான்
கொன்னு குலையறுத்து கோத்துவச்சு மாட்டிருவேன்
என்ன நெனச்சேடி ஏய்..... .

அடிப்பே தெரியாது, ஆம்பிளைன்னா என்ன
முடிமேல  கொம்பிருக்கோ  முட்ட? - குடிகாரா
ஒன்னால நானும் ஒருசொகமும் காணல்லே
சொன்னாலே வெக்கமய்யா தூ.....

நிறுத்தடி வாயை , நிறுத்தாட்டி தாலி
அறுத்து அனுப்பிருவேன் ஆமா - பொறுத்து
ஒருநிமிஷம் பாப்பேன்டி ஒண்ணும் வரலே
அருவா எடுத்துருவேன் ஆங்.

இந்தாய்யா தாலி, இதவச்சு தண்ணியடி
மொந்தை கணக்கா முழுங்குய்யா - எந்திரிச்சு
ஓடுய்யா, நாந்தேன் உசுரவிட்ட பின்னாடி
பாடுய்யா ஒப்பாரி பாடு.
 
                                                     -சிவகுமாரன்
                                                 (படம் உதவி- தேன்மொழி )
                                                   

56 கருத்துகள்:

 1. "புலவர்க்கு வெண்பா புலி" என்பார்கள்.அந்த புலியை எலி வளைக்குள் அடைக்கப் பார்த்திருக்கிறேன். கோட்டையிலும் கோபுரத்திலும் கோலோச்சிய வெண்பாவை குடிசைக்குள் இழுத்து வந்திருக்கிறேன். இலக்கணம் மீறவில்லை, ஆனாலும் கொஞ்சு தமிழை கொச்சைத் தமிழ் ஆகியிருக்கிறேன். நளவெண்பா பாடிய புகழேந்திப் புலவரும், நசிகேத வெண்பா எழுதும் அப்பாஜிப் புலவரும் மன்னிப்பார்களாக.

  பதிலளிநீக்கு
 2. வெண்பா குடிசையிலும் கொடிகட்டி பறக்கிறது... குடியால் குடி கெட்டழிவதையும் சுட்டி காட்டியபடி...

  பதிலளிநீக்கு
 3. உங்கள் எழுத்து என்னை வசீகரிக்கிறது. என் தடத்துக்கும் சற்றே
  வாருங்களேன்

  பதிலளிநீக்கு
 4. சிவகுமாரன்.மிக அருமை பட்டைய கிளப்பிட்டிங்க.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. வித்தியாசமான முயற்சி! அருமை! மிக அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. நல்லா இருக்குங்க சிவகுமாரன்...

  பதிலளிநீக்கு
 7. குடிசையில் வெண்பா கூலித்தொழிலாளியும்
  குடிகாரந்தானா
  களையெடுக்கும்
  கண்மணிக்கு கஞ்சு
  ஊத்தாமா ஊத்திகிறான்
  குடிமகன் .........

  நல்லா இருக்கு சார்

  பதிலளிநீக்கு
 8. போதையை ஏற்ற காசு கேட்கும் குடிகாரக் கணவனின் மனைவியின் அவலம் பற்றி சிந்தித்து எழுதியுள்ளீர்கள்.
  தமிழில் கிராமத்து வாசனை வீசுகிறது. முயற்சிக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. நிறுத்தடி வாயை , நிறுத்தாட்டி தாலி
  அறுத்து அனுப்பிருவேன் ஆமா - பொறுத்து
  ஒருநிமிஷம் பாப்பேன்டி ஒண்ணும் வரலே
  அருவா எடுத்துருவேன் ஆங்.


  .....கண்ணீர் அவலங்கள்.

  பதிலளிநீக்கு
 10. நல்ல முயற்சி.. கவிதை அருமை...

  பதிலளிநீக்கு
 11. இந்தாய்யா தாலி, இதவச்சு தண்ணியடி
  மொந்தை கணக்கா முழுங்குய்யா - எந்திரிச்சு
  ஓடுய்யா, நாந்தேன் உசுரவிட்ட பின்னாடி
  பாடுய்யா ஒப்பாரி பாடு.
  ---------------------------------

  எங்கிருந்து வந்தது இந்த வரிகள்!

  பதிலளிநீக்கு
 12. அடிச்சு நொறுக்குங்க அண்ணே..

  பதிலளிநீக்கு
 13. புலியத் துரத்த முறம் வேணும், புருசனத் துரத்த தாலி போதுமே? இவ தமிழச்சி.

  பின்னுங்க பின்னு சொல்றேன்.

  பதிலளிநீக்கு
 14. புலவர்க்கு வெண்பா புலியா? அப்படியா?

  'வெறும் பா என்பதால் வெண்பா' என்று கேள்விப்பட்டிருக்கிறேன் - ஆழமற்றது என்று பொருளில். பரவாயில்லையே?

  பதிலளிநீக்கு
 15. மிக அருமை சிவா. :)

  பதிலளிநீக்கு
 16. சுஜாதாவுக்கப்புறம் வெண்பாவை வேறொரு தளத்தில் சுவாரஸ்யமான பொருளோடு.அருமை சிவகுமரன்.

  ஆனாலும் ஒரு குடிகாரனின் உன்மத்தமும் அபலைப் பெண்ணின் சோகமும் வடிவம் புதிதானதால் வருத்தம் தராது போனது ஒரு துயரம்.

  பதிலளிநீக்கு
 17. மன்னிக்கவும் சுந்தர்ஜி... தவறாக நினைக்காதீர்கள்.. சுஜாதா எழுதினது ஒரே ஒரு அசிங்கமான, சில்லி, சிறுபிள்ளைத்தனமான வெண்பா. அதில் சுவாரஸ்யமான பொருள் என்ன என்பது புரியவில்லை. வெண்பா என்பதற்கேற்றாபடி 'வெண் பா' எழுதினார் சுஜாதா.

  பதிலளிநீக்கு
 18. தவறாக நினைக்கவில்லை.

  சுவாரஸ்யமான பொருளோடு என நான் சுட்டியது சுஜாதாவையல்ல.சிவகுமரனையே.

  தவிரவும் அது என் கருத்து.இது உங்கள் கருத்து. அவ்வளவுதான்.

  பகிர்வுக்கு நன்றி அப்பாதுரை.

  பதிலளிநீக்கு
 19. பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
  முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
  ‘பாண்டு’வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
  வேண்டாம் வரதட்சிணை!


  மொரார்ஜி பிரதமராக இருந்தபோது சுஜாதா எழுதிய வெண்பா -

  ‘மீசா’ மறைந்து ‘எமர்ஜென்ஸி’ விட்டுப்போய்த்
  தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்
  பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லாரும்
  ………….. குடிக்க வாரும்.

  என் ஞாபகத்தில் இருந்து சில வெண்பாக்கள் சுஜாதா எழுதியது.

  எல்லோருக்கும் புரியும்வகையில் வெண்பாவை சுவாரஸ்யப் படுத்தியதில் சுஜாதாவுக்குப் பெரும் பங்கு உண்டு.

  மற்றபடி ரசனையில் வேறு அரசியல் எதுவுமில்லை.அதை நான் விரும்புவதுமில்லை.

  பதிலளிநீக்கு
 20. சபாஷ் சரியான போட்டி. தொடரட்டும் விவாதங்கள். சுஜாதா சலவைக் குறிப்பு எழுதினாலும் பிரசுரிக்கவும் ரசிக்கவும் ஆட்கள் இருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார். அவர் ஜீனியஸ்.

  பதிலளிநீக்கு
 21. இதிலென்ன போட்டி சிவகுமாரன்? சுந்தர்ஜி சொன்னது போல் அவர் கருத்து என் கருத்து; அவ்வளவு தான்.

  இருந்தாலும், சுஜாதாவோட 'பெரும் பங்கு' என்னனு தெரிஞ்சுக்கத் தோணுது. :)

  பதிலளிநீக்கு
 22. ஆமாம், நீங்க சுஜாதாவை ஜீனியஸ்ன்றீங்க.. எதனாலே?

  பதிலளிநீக்கு
 23. அவர் ஒரு பன்முகத் திறமையாளர்.அந்த வகையில் ஜீனியஸ். வெண்பா எழுதுவார், Fiction எழுதுவார், மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக் சொல்வார், கதை வசனம் எழுதுவார், வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு காரணகர்த்தா, நாத்திகம் பேசிக்கொண்டே திவ்ய பிரபந்தத்துக்கு விளக்கம் எழுதுவார், ஆனாலும் அவரது கற்றதும் பெற்றதும், சிலிகான் சில்லு புரட்சி தவிர நாவல்கள் நான் விரும்பி படித்ததில்லை.

  பதிலளிநீக்கு
 24. நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 25. @ அப்பாதுரை.....
  வெண்பா ஆழமற்றது என்று சொல்ல முடியாது.திருக்குறளும்
  வெண்பா தான்

  பதிலளிநீக்கு
 26. புதிய உயரத்தைத் தொடுகிறீர்கள் நண்பரே! நீங்கள்விரும்பினால் உங்கள் மின் அஞ்ச்சல் முகவரியைத் தாருங்கள். தகவல் அனுப்ப உதவியாக இருக்கும்---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 27. நன்றி அய்யா.
  எனது மின்னஞ்சல் முகவரி எனது profilie லேயே உள்ளது.
  varatharajsiva@gmail.com

  பதிலளிநீக்கு
 28. சுந்தர்ஜீ அண்ணா( அண்ணான்னு சொல்லலாம் தானே. நான் 5 வயது சிறியவன்))
  உங்கள் profileஇல் உங்க ப்ளாக் முகவரி இல்லையே.

  பதிலளிநீக்கு
 29. நீங்கள்தான் அதை முடிவு செய்தீர்கள் சிவா-உங்கள் வயது எனக்கு இதற்கு முன் தெரியாததால்.எனக்குப் புதிதாய் என்னையொத்த அலைவரிசையில் ஒரு தம்பி.மகிழ்ச்சி.

  சுட்டிய தவறைத் திருத்தி விட்டேன் சிவா.

  பதிலளிநீக்கு
 30. //ஆமாம், நீங்க சுஜாதாவை ஜீனியஸ்ன்றீங்க.. எதனாலே///

  மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களே..

  இல்லை எதாவது போட்டு வாங்கறிங்களா?

  பதிலளிநீக்கு
 31. ஏதோ ஒரு ஊரின் வழக்குத் தமிழில் குடிச்சிட்டு மனைவியோடு சண்டை போடும் காட்சி மனதில் விரிந்தது.அற்புதம் வெண்பாவாக !

  பதிலளிநீக்கு
 32. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 33. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 34. குறளுக்கு இணையில்லை குமாரன். என் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் வெண்பாவை வெண்கவி என்பார். ஓசைநயம் இருந்தால் போதும் வெண்பா எழுதிவிடலாம் என்ற பொருளில் அடிக்கடி வெண்பாவை இடிப்பார். அந்த படிப்பினை ஓரளவுக்கு என் நெஞ்சில் தங்கி விட்டது. ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது என்று தோன்றியது ஒரு காரணம். மொரார்ஜி வெண்பாக்கள் படித்ததும் ஒரு காரணம் :) முக்கியமாக, என்னால் (தவறாக) எழுத முடிவதும் ஒரு காரணம்.

  எப்படி இருந்தாலும், எனக்கு இன்னிசை வெண்பா தான் தமிழ்ப்பாவில் பிடித்தப் பா. அதனால் என் ஓட்டு வெண்பாவுக்குத் தான். எழுத எளிதோ (யார் சொன்னது?) அல்லது வெறும் ஓசை நயமோ - எதுவாக இருந்தாலும் நான் வெண்பா ரசிகன். குறள் ரசிகன். (பாரதிதாசனின் மணிமேகலை வெண்பா படித்திருக்கிறீர்களோ? ஆழமில்லாதது என்று சொல்லவே முடியா கவி புனைந்திருக்கிறார்)

  பதிலளிநீக்கு
 35. பத்மநாபன் - சாதாரணமா கேட்டேங்க. ஜீனிய்ஸ்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்துக்காகச் சொல்றோம், நண்பர் சிவாவின் காரணத்தைத் தெரிந்துகொள்ளவே கேட்டேன். மற்றபடி எந்த எண்ணமுமில்லை (யம்மாடி.. நல்ல வேளை, சோப்பு தரையைக் கவனிச்சேன்..)

  நானும் சுஜாதாவை உயர்வாக மதிக்கிறவன் தான்.

  பதிலளிநீக்கு
 36. இந்தாய்யா தாலி, இதவச்சு தண்ணியடி
  மொந்தை கணக்கா முழுங்குய்யா - எந்திரிச்சு
  ஓடுய்யா, நாந்தேன் உசுரவிட்ட பின்னாடி
  பாடுய்யா ஒப்பாரி பாடு.
  parattugal

  பதிலளிநீக்கு
 37. உங்கள் வெண்பா உங்கள் பால் ஈர்த்துவிட்டது.. அழகான முயற்சி..

  பதிலளிநீக்கு
 38. வருகைக்கு நன்றி ரிஷபன், தயாநிதி சார் .

  பதிலளிநீக்கு
 39. சிவா! அழகான வெண்பா விளையாட்டு. கருத்தேற வளைந்து கொடுக்கும் தன்மைக் கொண்டது வெண்பா. உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன் தம்பி! இப்படி புதுக்களங்களை எடுத்து புனையுங்கள் வெண்பா.

  பதிலளிநீக்கு
 40. நல்லாயிருக்கு சிவா... வசவைக் கூட இசை கூட்டி பேசினா நாராசமின்றி ரசிக்க முடிகிறது! அமிழ்தமிழின் கிறக்கமோ அது!! மறுமொழியில் ஆரோக்கிய விவாதம் சுஜாதா புகழுக்கு புண்ணியம் சேர்க்கும்படி...

  பதிலளிநீக்கு
 41. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 42. எண்பதுகளின் முடிவில் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் என்று நினைக்கிறேன் - கேனடாவில் ஒரு தமிழர் தமிழில் எழுத ஒரு மென்பொருளைத் தயாரித்து இலவசமாக வழங்கினார். அவர் பெயரும் மென்பொருள் விவரமும் மறந்து விட்டதில் வெட்கப்படுகிறேன். இன்றைய எழுத்து 'ஒலிபெயர்ப்பு' வித்தைகளுக்கு வித்திட்டவர். விண்டோசுக்கும் முந்தைய காலமென்பதால் - கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது; இருப்பினும் தமிழைத் தொலைத்தவர்கள் அவர் மென்பொருளைப் புதையலாகப் பாவித்தார்கள். சொல்ல வந்தது இது தான்: 0,1 இவற்றை வைத்து வெண்பா தயாரிக்கும் கருவியை தன் மென்பொருளில் கொடுத்திருந்தார். 0,1 இரண்டும் ஈரசைச் சொற்களைக் குறிக்கும். ஒன்று நேர், மற்றது நிரை. ஈரசைச் சொற்களைக் கொடுத்தால் மென்பொருள் தானாகவே வெண்பா எழுதிக்கொடுக்கும். செப்பலோசை தூக்கும் - பொருளில்லாவிட்டாலும். நிறைய நாட்கள் சேமித்து வைத்திருந்தேன் அந்த மென்பொருளை.

  பதிலளிநீக்கு
 43. நல்ல வேளை( வேலை?)தொலைச்ச்ட்டீங்க. இல்லேன்னா நமக்கெல்லாம் மவுசு இல்லாம போயிருக்கும்.

  பதிலளிநீக்கு
 44. இணையத்துல யாராவது வச்சிருப்பாங்கனு ஒரு நப்பாசை :) அந்தக்கால usenet பயன்படுத்தினவங்க யாராவது இதைப் படிச்சு எப்படித் தேடுறதுனு தெரிஞ்சு எடுத்துக் கொடுக்கலாம் ...

  வெண்பாவுக்கு அழகு ஓசை மட்டுமா? ஓசையும் குறும்பும் அப்போதைக்கு வேணும்னா நல்லா இருக்கும். கருத்து தானே காலமெல்லாம் ரசிக்க வைக்கும்? எத்தனை "பார்முலா" வந்தாலும் புதுக்கருத்தையும் கோர்வையும் கொண்டு வருவது இயலாத செயல் - அதனால உங்க மவுசு குறையவே குறையாது :)

  இருந்தாலும் ஒரு பொழுதுபோக்காக அந்த மென்பொருள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 45. கலம்பக வெண்பா,கட்டளை வெண்பா,மயூரவியல்வெண்பா,சமவியல் வெண்பா,சமனடை வெண்பா,சிந்தியல் வெண்பா....
  மென்பொருள் வெண்பா?! அதுக்கு கருப்பொருள் போதாதோ?
  மென்பொருள் கிடைத்தால் ஒரு கடுதாசி போடுங்க அப்பாஜி! ஆச்சரியமா
  இருக்கு... எவ்வளவு உழைச்சிருக்கணும் அந்த சிலிக்கான் கவிஞன்!

  பதிலளிநீக்கு
 46. இந்தாய்யா தாலி' படிதேன்...சம்பத்தப்பட்ட கணவன்,மனைவி இருவரிடத்தும் உச்ச கட்ட மூர்க்கம்...அது குடியின் தாக்கம்.வேறென்ன சொல்ல...நம் தமிழ் மக்களின் திறனையும்,சிந்தனையையும் மழுங்கடிக்கும் இந்த குடிப் பழக்கம் என்று மாயும்,தோழரே?

  பதிலளிநீக்கு
 47. குடி நம் கலாச்சாரத்தோடு கலந்துவிட்டது தோழரே.குடிகாரர்களை நம்பித்தான் இன்று அரசாங்கமே செயல்படுகிறது. மதுவிலக்கு கொண்டுவந்தால் கஜானா காலியாகிவிடும் என்ற நிலைமை , நமக்கெல்லாம் வெட்கக்கேடு.

  பதிலளிநீக்கு
 48. நட்சத்ர ஓட்டல் நடுவுல ஒக்காந்து
  சட்டியில கூழும் சரக்கோட - உப்புக்
  கருவாடும் சேத்துக் கடிச்சதுபோல் இந்த
  புருசன்பொண் சாதி பொழப்பு.  பதிலளிநீக்கு
 49. உடம்புக்குத்தான் சட்டை.
  கர்நாடக இசையில் ஒப்பாரி பாடமுடியுமானு தெரியல.
  நம்ம தமிழ்நாட்டுக் கிராமத்துப் பொண்ணுக்கு வடநாட்டு ஜிகினா ஜாக்கெட்டப் போட்டு தன்மகனோட டுயர் பாடவுட்டு பாரதிராஜா (தாஜ்மகால்)பாட்டு எடுத்தாரே அந்தமாதிரி, இது உங்களுக்கு வெண்பா “தண்ணிபட்ட”பாடு என்பதை விளக்கும் அன்றி, நிரந்தரமான சிவகுமாரனின் காவியம் எங்கே? அதை எனக்குக் காட்ட வேண்டுகிறேன். சுஜாதாவின் வெண்பா ஒரு சைட் டிஷ் அவரின் மாஸ்டர் பீஸ் “என் இனிய இயந்திரா“ நாவல்தான்.

  பதிலளிநீக்கு
 50. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 51. அரியா சனமிட்டே ஆண்டகதை வேண்டாம்!
  “வரியா“ எனக்கேட்ட வாக்கும் - புரிந்து
  சிரிப்போம்நாம்! நெஞ்சம் சிவந்ததே அண்ணன்
  வரிக்குவால் ஆட்டும்வெண் பா!


  அந்தணப் பாவென்றார்! அச்சேரிப் பேச்சடைக்க
  நொந்தகதை வெண்பா சொலும்

  நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
 52. \\\வரிக்கு வாலாட்டும் வெண்பா!///
  - இரசித்து மகிழ்ந்தேன்.
  நன்றி விஜு

  பதிலளிநீக்கு
 53. @ முத்துநிலவன் அய்யா.
  இந்தக் கவிதை எனது வித்தியாசமான முயற்சி. அவ்வளவே .
  காவியம் பாடும் அளவுக்கு நான் பெரும் புலவனில்லை. ஆனாலும் தாங்கள் விரும்பிய வெண்பா, இந்த சுட்டிகளில் ஏதேனும் ஒன்றில் ஒளிந்திருக்கும் என நம்புகிறேன்.

  http://sivakumarankavithaikal.blogspot.in/2010/11/blog-post_14.html
  http://sivakumarankavithaikal.blogspot.in/2012/12/blog-post.html
  http://sivakumarankavithaikal.blogspot.in/2012/09/blog-post_24.html
  http://sivakumarankavithaikal.blogspot.in/2012/05/4.html
  http://sivakumarankavithaikal.blogspot.in/2011/05/blog-post.html
  http://sivakumarankavithaikal.blogspot.in/2011/04/blog-post.html

  பதிலளிநீக்கு