ஞாயிறு, ஜூலை 31, 2011

ததும்காததும் 3


தலைப்பை பார்த்து  பயந்து விட்டீர்களா ?
வேறொன்றுமில்லை .
அன்புச்  சகோதரி மஞ்சுபாஷினியின்  வேண்டுகோளுக்கிணங்க முத்தான மூன்று பதிவு தான் இது. எனக்குப் பிடித்ததும் , பிடிக்காததும் .ததும்காததும்.

எல்லாவற்றையும்  மூன்றுக்குள் அடக்குவதும் , சிலவற்றில் இரண்டுக்கே திணறுவதுமாய்.... கவிதை  தான் எனக்கு சுலபமாய் இருக்கிறது.
இனி..

1. பிடித்த விஷயங்கள் 
 கடவுள் நம்பிக்கை 
 கவிதையோடு வாழ்க்கை 
 கம்யூனிசக் கொள்கை 

2. பிடித்த உறவுகள்
உலகைக்  காட்டிய அம்மா
உயிரில் கலந்த மனைவி 
உணர்வில் ஒன்றிய சகோதரர்கள்

3. பிடித்த உணர்வுகள் -1 (செய்வது)
விட்டுக் கொடுத்தல் 
தட்டிக் கொடுத்தல் .
கட்டுப் படுதல்

4. பிடித்த உணர்வுகள்-2 ( செய்ய நினைப்பது)
விட்டுப் பிடித்தல்
தட்டிக் கேட்டல் 
கட்டறுத்தல்  

5. பிடிக்காத உணர்வுகள் 
குற்றம் பார்த்தல்
பற்ற வைத்தல் 
வெ(ற்)றுப் பேத்தல் .

6. முணுமுணுக்கும் பாடல்கள் .
மோகம் என்னும் தீயில்

7. பிடித்த பாடல்கள்
காற்றில் எந்தன் கீதம்
ஏழிசை கீதமே
என்னுள்ளே எங்கோ


8. பிடித்த பாடகர்கள்
ஜேசுதாஸ்
என் தம்பி
என் அம்மா 


9 .பிடித்த திரைப் படங்கள்.
மறக்க முடியாத "கர்ணன்" - நெஞ்சை 
உருக்கிய  எங்கள் "பாரதி" - கண்ணீர் 
சுரக்க வைத்த "தவமாய் தவமிருந்து

10. ரசித்த திரைப்படங்கள் 
பாட்ஷா
எந்திரன்
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி  

11ரசித்துப் பார்ப்பவை 
கால்பந்து 
காமெடி 
கார்ட்டூன் (வேறு வழி?)12. பிடித்த பொன்மொழிகள்
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை 

எல்லோருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம் 
சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம் .

எங்கே விழுந்தாயென பார்க்காதே   
எங்கே வழுக்கினாயென பார் 

13. அன்புத் தேவைகள்
பலன் எதிர்பாரா உறவு
நலம் நாடும் நட்பு
வளம் தரும் இறையருள்.

14. வலிமையை அழிப்பவை
நையப் புடைக்கும் நோய்  
அய்யோ பாவம்....வாய் 
பொய்யாய் இரைக்கும் புகழ் 


15. வெற்றி பெற வேண்டியவை
நிறைய முயற்சி
திறமை
இறையருள்

16. கற்க விரும்புவது
புல்லாங் குழல் வாசிக்க
தில்லாய் கார் ஓட்ட
நல்லா கணிணி இயக்க

17. சோர்வு நீக்கத் தேவையானவை
"பா"க்கள்
ஊக்கம்
தூக்கம்

18. பயமுறுத்தும் பயங்கள்.
இறங்க மறுக்கும்  விலைவாசி   
இரவுநேரத் தொலைபேசி
இணையத்தில் பிள்ளைகள் பெறும் தேர்ச்சி

19. எரிச்சல்  ஊட்டுபவை .
நரம்பின்றி பேசும் நாக்கு
வரம்பின்றி நுழைக்கும் மூக்கு
அரசியல்வாதியின் வாக்கு.

20. புரிந்தும் புரியாது குழப்புவது 
ஜோதிடம்
மரணமிலாப் பெருவாழ்வு
அரசியல் கூட்டணி 


21. இனிமையானவை
தமிழ்
மழலை
இசை.

22. ஆசைப்படுவது
ஒரே பிள்ளையின் உயர்கல்வி - கர்வப்படுவதாய்
ஒரேயொரு காவியம் - கவிதையாய்
ஒரேயொரு முறை காசி - கால்நடையாய்

23. அடைய விரும்புவது
தடம் பதிக்கும் வாழ்க்கை
கடன் இல்லா மரணம்
பிறவா வரம்.
                                                                               -சிவகுமாரன் 


இந்தத் தொடருக்கு என்னை அழைத்த சகோதரி மஞ்சுபாஷினிக்கு என் நன்றிகள்.
சக பதிவர்கள் பலரும் பதிவிட்டு முடித்ததால் விடுபட்டவர்கள் யாவரும் தொடரலாம் 

48 கருத்துகள்:

 1. நச்சுன்னு இருந்துச்சு...

  பதிலளிநீக்கு
 2. பிடித்த பாடகர்கள்..உங்க அம்மாவும் தம்பியும் இத பார்த்தால் சந்தோச படுவார்கள்...

  பதிலளிநீக்கு
 3. பதில்கள் எல்லாம் உங்கள் பாணியில் நன்றாக அமைந்திருக்கின்றன. நீங்கள் அடைய விரும்புவதெல்லாம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். நீங்கள் ஆசைப்படுவதெல்லாம் நிறைவேறவேண்டும். வலிமையை அழிப்பவற்றை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. கவிதை போன்ற பதில்கள்,எதுகை மோனையுடன்!

  பதிலளிநீக்கு
 5. ததையும் காததையும்
  உங்களுக்கே உரிய
  அழகிய எதுகை மோனை
  அலங்காரங்களோடு சொன்னதை
  மீண்டும் மீண்டும்படித்து ரசித்தேன்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. எதிலும் உங்க‌ள் முத்திரை!

  பதிலளிநீக்கு
 7. . //எரிச்சல் ஊட்டுபவை .
  நரம்பின்றி பேசும் நாக்கு
  வரம்பின்றி நுழைக்கும் மூக்கு
  அரசியல்வாதியின் வாக்கு//

  அனைத்தும் பிடித்தது- அதில்
  மிகவும் பிடித்தது இது

  தம்பீ! மு மூ மு எழுத, நான்
  பட்ட பாடு போதும் போதும்
  எல்லாமே என்னை எழுது வந்தா
  என்ன செய்யறது.

  உண்மையா சொன்னா நான்
  மூன்று கவிதைகள் எழுதியிருப்பேன

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 8. முத்துக்கள் மூன்றும் கவிதை நடையிலேயே.... !

  பதிலளிநீக்கு
 9. அழகான எண்ணங்கள் . பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லாஆகஸ்ட் 01, 2011 5:36 PM

  12. பிடித்த பொன்மொழிகள்

  எல்லோருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
  சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம் .

  எங்கே விழுந்தாயென பார்க்காதே
  எங்கே வழுக்கினாயென பார் ////

  இந்த இரண்டு பொன்மொழிகளும் மனதைக் கவர்ந்தது

  பதிலளிநீக்கு
 11. ஆஹா அருமையா எழுதி இருக்கீங்க... கவிதையான பதில்கள்.....ததும் காததும்... தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று உள்நுழைந்தால் பாராட்டாமல் இருக்கமுடியாதபடி....

  பிடித்த விஷயங்களில் பிள்ளையார் சுழிப்போட்டு கடவுள் நம்பிக்கையில் தொடங்கி கவிதையோடு வாழ்ந்து கம்யூனிசமா வெரி குட்....

  ஒவ்வொரு வரியுமே தனித்துவமாய் நிமிர்ந்து வைரமாய் மின்னுகிறது... இயல்பான வாழ்க்கையும் நல்ல மனமும் ஒரு சேர அறிய முடிகிறது...

  எளிமையான வரிகளில் நேர்மை குணம் தெரிகிறது....

  ஒன்னும் தெரியாது கவிதை மட்டும் தான் எழுத தெரியும்னு நீங்க சொன்னது நிஜமே சிவகுமாரன்...

  ஏன்னா ஒவ்வொரு பதிலுமே கவிதையாய் தானே மலர்ந்திருக்கு.....

  என்னது பிடித்த பாடகர்கள் தம்பி அம்மாவா... ரசித்தேன் நான் இதை....

  உறவுகளை நேசித்து நட்பை உயர்வுபடுத்தி...

  பொன் மொழிகள் எல்லாமே மிக மிக அருமை....

  தில்லாய் கார் ஓட்டனும்னா கண்டிப்பா ரோட்டில் தைரியமா நடந்தாலே போதும் என்னைப்போல ஆட்கள் நடந்தால் வண்டி ஓட்டுவோர் ரொம்ப பாவம் :)

  நரம்பின்றி பேசும் நாக்கு அதிகபிரசங்கிதனமா நுழைக்கும் மூக்கு அரசியல்வாதிகளின் வாக்கு அட்டகாசம் இது....

  கவிஞரல்லவா அதான் சோர்வு நீக்க பாக்கள் வேணும்னு சொல்லி இருக்கீங்க...

  புரிந்தும் புரியாம குழம்புவது சிரிக்கவைத்துவிட்டது அரசியல் கூட்டணி படிச்சதுமே ஹாஹா...

  இனிமையென சொல்லி அசத்திய மழலை இசைக்கும் முதலில் சொன்னது தமிழ்... பாராட்டுக்கள் சிவகுமாரன்...

  காசிக்குப்போனால் ஆசைப்பட்டதை விட்ரனுமாமே? தெரியுமோ? காசிக்கு போவது சரி அதென்னப்பா கால்நடையா? பொடிநடையா நடக்க காசி கிட்ட இல்லையே சிவகுமாரன் :( ரயில்ல போனாலுமே ரொம்ப தூரமாச்சேப்பா... ஆனாலும் மன உறுதியும் உடல்நலமும் நலமுடன் இருந்து உங்கள் இந்த ஆசை ஈடேற என் அன்பு வாழ்த்துகள் சிவகுமாரன்.... என் அம்மா எப்ப இந்தியா போனாலும் இரண்டு முறை ஷீர்டி ரெண்டு முறை காசி போய் வராங்கப்பா... நானும் போகணும்னு நினைக்கிறேன்.....

  முத்தாய்ப்பாய் சொன்னது தடம் பதிக்கும் வாழ்க்கை , கடனில்லா மரணம், முக்தி....

  ஒவ்வொரு பதிலும் சிந்திக்க தான் வைத்துவிட்டது சிவகுமாரன் என்னை....

  மிக மிக அருமையான பதில்களப்பா எளிமையான மனிதரிடம் இத்தனை சிறப்பான பதில் கிடைத்ததற்கும் என் வேண்டுகோளை அன்புடன் ஏற்று சிரமம் பாராமல் அசத்திய சிவகுமாரனுக்கு அன்பு பாராட்டுகளுடன் கூடிய நன்றிகள்.....

  பதிலளிநீக்கு
 12. ”ததும்காததும்” புரியாத தலைப்பு என பார்த்தால்- எத்துணை பெரிய விசயங்களை எவ்வளவு எளிமையாய் இனிமையான நடையில் புரியும் படி தந்து விட்டீர்கள்!
  பார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கி வைக்கும் பகல் திருடன் தான் நீங்கள்...வார்த்தைகளால் தவமியற்றும் கவிச்சித்தனும் தாங்கள் தான்... (தினமும் ரசிக்கும் தங்களைப்பற்றிய விவரம்)
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. எளிமை, நேர்மை, உண்மை! பிடித்த/பிடிக்காத தொடர்பதிவை கவிதை நடையில் எழுதி அசத்தி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 14. சிவகுமரன் அவர்களே! இங்குலாப் ஜிந்தாபாத்! சாமிசரணம் ஐயப்பா! என்று கோஷம் பொடும் கேரளத்து நண்பர்கள் பலர் எனக்குண்டு.வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் சகோ,
  தித்திப்பான தீந் தமிழில், உங்கள் மன உணர்வினை வெளிப்படுத்தும் வகையில்,
  ரசனைகளுக்குச் சான்றாக,
  முத்தான மூன்று ரசனைகளை வெவ்வேறு தலைப்பின் கீழ்த் தந்திருக்கிறீங்க.
  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 16. உணர்வில் ஒன்றிய உறவே வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. உங்களின் எளிய வழியில் சிறப்பான பதில்கள் ..

  பதிலளிநீக்கு
 18. நல்லா இருக்கு பதில்கள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. பதில்களின் உங்களைப் புரிந்துகொண்டேன் !

  பதிலளிநீக்கு
 20. உங்கள் தளத்திற்கு இன்றே நான் அறிமுகமாகின்றேன். . .முத்தான மூன்று, முத்துக்களாகவே அமைந்திருக்கின்றன. . .அருமை. . .

  பதிலளிநீக்கு
 21. முத்தான மூன்றுக்கள் அனைத்தும் முத்துக்கள்.. அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 22. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 23. அன்புத் தேவைகள்
  //பலன் எதிர்பாரா உறவு
  நலம் நாடும் நட்பு
  வளம் தரும் இறையருள்.//

  அன்பான தேவை மூன்றுகள் அருமை

  பதிலளிநீக்கு
 24. கால் நடையாகக் காசியா? எங்கிருந்து?

  பதிலளிநீக்கு
 25. சிவகுமாரன் சார்
  மேகம் போல நீங்கள் பொழிகிற
  கவிதைகளால் ஆங்காங்கே சில
  செடிகள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன
  அதில் அடியேனும் ஒருவன்
  தங்களை இன்றைய வலைச்சரத்தில்
  அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
  பெரும் பேறாகக் கருதுகிறேன்

  பதிலளிநீக்கு
 26. ''..எல்லோருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
  சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்''...
  interesting answers..
  Vetha.Elangathilakam
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 27. எளிமையான ஆர்ப்பாட்டமில்லா பகிர்வு. ரசிக்கவைத்தது.

  மற்றொரு தொடர்பதிவுக்குத் தங்களை அழைத்துள்ளேன். முடியும்போது பதிவிட்டுப் பங்களிக்கவும், நன்றி.

  பதிலளிநீக்கு
 28. பிடித்த பாடகர் லிஸ்டில் என்னை சேர்த்தர்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் . நன்றி சொல்ல வார்த்தை இல்லை

  பதிலளிநீக்கு
 29. சிவா

  சூப்பர். ரொம்ப அனுபவித்து எழுதி இருக்கின்றீர்கள்.

  எனக்கு இப்போது ஒரு பைசா கடன் இல்லை !

  நாப்பது வயதிற்குள் கடனுடன் வாங்கிய ஒரு வீட்டின் கடனை அடைத்து ஆகிவிட்டது (நான்கு வருடங்களுக்குள்), கடனே வாங்காமல் இரண்டு காலி மனைகள், ரொக்க பணம் என்று இருந்தும் வாழ்வில் நிம்மதி இல்லை !

  அதனால் எனக்கு மரணம் மட்டும் தான் இப்போது வேண்டும் !

  பதிலளிநீக்கு
 30. அன்பின் சிவகுமாரா, பலரும் எழுதிய மூன்று விஷயங்கள் பிடித்ததும் பிடிக்காததுமாக படித்து வருகிறேன், உங்கள் பதிவுக்கு மட்டும் உரிமையோடு ஒன்று கூற விரும்புகிறேன்.நமக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்கள் இருக்கட்டும். மற்றவருக்கு நம்மில் பிடித்த பிடிக்காத விஷயங்களைப்பற்றி சிந்திக்கிறோமா.?நமக்குத் தெரிந்த மாற்றிக்கொள்ளா முடிந்த , மாற்றிக்கொள்ளவிரும்பும் குணங்களை நாம் INTROSPECT (உள்நோக்கல்) செய்கிறோமா.?மாற்றிக்கொள்ளவிரும்பாத குணங்களும் அறிவோமா.?

  பதிலளிநீக்கு
 31. அருமையாய் முடிச்சுக்களை அசத்தியிருக்கிறீங்கள்...
  விரும்பியவைகள் ஈடேற வாழ்த்துகின்றேன்...சகோ..

  பதிலளிநீக்கு
 32. அடைய விரும்பும் மூன்றும் அருமை!
  புரிந்தும் புரியாமல் குழப்பும் மூன்றும் மிகுந்த சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
 33. நன்றி ஆமினா, ஆகுலன், சந்திர கௌரி, கலாநேசன், சென்னைப் பித்தன், ஜீ, ரமணி, நிலாமகள், புலவர் ராமானுசம், சத்ரியன், பனித்துளி சங்கர் & ஷீ நிஷி,
  மிக்க நன்றி அனைவருக்கும்

  பதிலளிநீக்கு
 34. சகோதரி மஞ்சுபாஷினிக்கு என் பிரத்தியேக நன்றிகள். இப்பதிவு எழுத அழைத்ததற்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும்.
  முதலில் எரிச்சலோடு தான் எழுத் ஆரம்பித்ததேன். போகப் போக ஒரு சுய தேடலாய்... எனக்கே சுவாரசியமாய் அமைந்தது. இன்னும் GMB சார் சொன்னது போல் எனக்குப் பிடித்த பிடிக்காத மட்டுமின்றி, என்னிடமே எனக்குப் பிடிக்காததும் எழுதி இருந்தேன். ஆனால் இந்தத் தொடர பதிவில் யாரும் அதை எழுதாததால் நான் நீக்கி விட்டேன்.

  வரிக்கு வரி ரசித்த தங்களுக்கு மிக்க நன்றி.
  வேலைப் பளுவால் வலையுலகில் இருந்து விலகி விடலாமா என்றிருந்த நிலையில் , இந்தப் பதிவுக்கும் இதற்கு முந்தைய பதிவுக்கும் தங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள் என்னை கட்டிப் போட்டு விட்டன. தங்களைப் போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை என்னால் வலையுலகில் இருந்து விலக முடியாது போலிருக்கிறது.
  மிக்க நன்றியுடன்
  சகோதரன் சிவா .

  பதிலளிநீக்கு
 35. தென்றல் கூறியது.
  \\\எத்துணை பெரிய விசயங்களை எவ்வளவு எளிமையாய் இனிமையான நடையில் புரியும் படி தந்து விட்டீர்கள்!
  பார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கி வைக்கும் பகல் திருடன் தான் நீங்கள்...வார்த்தைகளால் தவமியற்றும் கவிச்சித்தனும் தாங்கள் தான்... (தினமும் ரசிக்கும் தங்களைப்பற்றிய விவரம்)
  வாழ்த்துக்கள்//

  தினமும் ரசிக்கும் - இந்த வார்த்தையில் மனம் குளிர்ந்து போனேன்.
  ஒரு கலைஞனுக்கு வேறென்ன வேண்டும் ?
  மிக்க நன்றி மேடம்

  பதிலளிநீக்கு
 36. நன்றி ஸ்ரீராம், நிரூபான், சிவமணி அண்ணன், அரசன், r .v சரவணன் , ஹேமா, நாகா, பிரணவன், மாயா உலகம், கவிதை, கீதா, தம்பி பிரபு, & மனோ சாமிநாதன் மேடம்.

  அனைவருக்கும் நன்றிகள்.
  ,

  பதிலளிநீக்கு
 37. நன்றி காஷ்யபன் அய்யா,
  உங்க கேரளத்து நண்பர்கள் போலத் தான் நானும். பாரதி கம்யூனிசக் கொள்கை உடையவன் ஆனால் சக்திதாசன். தவத்திரு குன்றக்குடி அடிகளார், கம்யூனிசக் கட்சி சார்புடைய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் ஓர் உறுப்பினராய் இருந்தவர். பொதுவுடைமைச் சித்தாந்தம் ஆன்மீகத்துக்கு எதிரானது அல்ல என்று நான் நம்புகிறேன்.
  மேலும், எனக்குப் பிடித்த விஷயத்தில்...
  கம்யூனிசக் கொள்கை என்று தான் சொல்லி இருக்கிறேனே தவிர கம்யூனிசக் கட்சி என்று சொல்லவில்லை.

  பதிலளிநீக்கு
 38. அப்பாஜி
  காசிக்கு பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் இருந்து 7 வருடங்களுக்குஒரு முறை செல்கிறார்கள். மொத்தம் 120 நாட்கள் . கச்சிதமாய் திட்டமிட்ட பயணம்.
  1983 தொடங்கி இதுவரை 5 முறை சென்றிருக்கிறார்கள். இந்த முறை 2011இல் என் சித்தப்பா ஆன்மீக குரு திரு அரசு உள்ளிட்ட 15 பேர் சென்று வந்திருக்கிறார்கள். அடுத்து 2018 இல் செல்ல இருக்கிறார்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 39. ரமணி சொன்னது
  \\சிவகுமாரன் சார்
  மேகம் போல நீங்கள் பொழிகிற
  கவிதைகளால் ஆங்காங்கே சில
  செடிகள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன
  அதில் அடியேனும் ஒருவன்
  தங்களை இன்றைய வலைச்சரத்தில்
  அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
  பெரும் பேறாகக் கருதுகிறேன்//

  எவ்வளவு பெரிய வார்த்தை சொல்லி இருக்கிறீர்கள். தங்கள் அனுபவத்திற்கு முன்னால் நான் மிகச் சிறியவன்.
  நான் கண்ணாமூச்சி காட்டி கலைந்து போகும் மேகம் என்றால் நீங்கள் ஆலமரம்.என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி... நன்றி

  பதிலளிநீக்கு
 40. சாய் சார்,
  இப்போது ஏன் மரணம் பற்றிய தேடல்?.
  தங்களின் நகைச்சுவை உணர்வும், ஆன்மிக தேடலும் தங்களை நீண்ட நாட்கள் நலமுடன் வாழ துணை புரியும்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 41. நன்றி gmp சார்.
  இந்தத் தொடரில் முந்தய பதிவர்கள் எழுதி இருந்த கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லி இருக்கிறேன். என்னிடம் இருக்கும் குறைகளை நான் சுய பரிசோதனை செய்வதுண்டு.
  நீங்கள் கூட ஒரு பதிவில் என் குறைகளை ( பெயர் குறிப்பிடாமல் சூசகமாய் ) சரியாகவே சொல்லி இருந்தீர்கள்.
  கருத்துப் பதிவுக்கு நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 42. இதைத் தவறா விட்டு விட்டேன் சிவா. லயிப்புடன் படித்தேன். சிலவற்றில் சுயதரிசனமும் நிகழ்ந்தது

  பதிலளிநீக்கு
 43. //எரிச்சல் ஊட்டுபவை .
  நரம்பின்றி பேசும் நாக்கு
  வரம்பின்றி நுழைக்கும் மூக்கு
  அரசியல்வாதியின் வாக்கு//

  //எல்லோருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
  சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம் .//

  படித்தது அனைத்தும் பிடித்தது- அதில்
  மிகவும் பிடித்தது இது..

  அப்பாடா இப்பவே கண்ணைக் கட்டுதே... எப்போ எல்லாவற்றையும் படித்து முடிப்பது...!!!
  ஒவ்வொனறாகப் படித்துக் கருத்து கூறுகின்றேன் சிவா...விட்டதையெல்லாம் பி(ப)டிக்க வேண்டுமே....

  பதிலளிநீக்கு