செவ்வாய், மே 30, 2023

வளையும் கோல்
வளைந்த செங்கோல்
பாண்டியன் உயிரைக்
குடித்த பின்தான்
நிமிர்ந்தது.

ஆயிரம் கண்ணகிகள்
உங்கள்
செங்கோலின் முன்னே.

உயிர்ப்பயமே இன்றி
வளைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
மாமன்னரே.

                                          - சிவகுமாரன்

3 கருத்துகள்:

 1. நல்லாருக்கு. உங்கள் கவிதைகளை ரசித்து வாசிப்பேன்....ஆனால் இது யோசிக்க வைக்கிறதே. மன்னரின் உயிரைக் குடித்து நிமிர்ந்த பின்னும் இன்னும் வளைந்து கொண்டிருக்கிறதே செங்கோல், மன்னனின் உயிரும் போனபின் அவருக்குப் பயம்? ஒரு வேளை எனக்குதான் கவியின் பொருள் புரியலையோ!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா மேடம்.
   இரு நிகழ்வுகளை சொல்கிறது இந்த கவிதை.
   ஒன்று சிலப்பதிகாரச் செங்கோல்.

   இன்னொன்று
   இன்றைய
   எதேச்சதிகாரச் செங்கோல்.

   நீக்கு