அடைமழைக் காலம்
அடிக்கும் வெயிலாய்
கொடைக்கானல் காலைக்
குளிராய் - மடைதிறந்த
வெள்ளத்தைக் கண்ட
விளைநிலமாய் நீயென்னை
தெள்ளத் திருடிய
தீ .
தீபுகுந்த முட்காடாய்
தீய்ந்தெரியும் என்வாழ்வில்
நீபுகுந்தாய் வெள்ளமென
நீர்சுமந்து ! - கோபுரத்தின்
உச்சியினில் வீசும்
ஒளியாய் நுழைந்திட்டாய்
குச்சுக் குடிலில்
குனிந்து.
அடிக்கும் வெயிலாய்
கொடைக்கானல் காலைக்
குளிராய் - மடைதிறந்த
வெள்ளத்தைக் கண்ட
விளைநிலமாய் நீயென்னை
தெள்ளத் திருடிய
தீ .
தீபுகுந்த முட்காடாய்
தீய்ந்தெரியும் என்வாழ்வில்
நீபுகுந்தாய் வெள்ளமென
நீர்சுமந்து ! - கோபுரத்தின்
உச்சியினில் வீசும்
ஒளியாய் நுழைந்திட்டாய்
குச்சுக் குடிலில்
குனிந்து.
சிவகுமாரன்