ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

ஈழம்....இருக்கிறதா ஈரம்

 
யாதும் ஊரே யாவரும் கேளிர் 
மீதம் உளரோ ஈழத்தில் கேளிர் ?

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே
ஈழம் என்கின்ற போதினிலே
ஈயம் பாயுதோ காதினிலே?

சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்
 எங்களின் இனப்பிணங்கள்
அள்ளி வரவோ?

தமிழை பழித்தவனை
தாய் தடுத்தாலும் விடேன்
தமிழரை அழித்தவனை
யார் தடுத்ததால் விட்டீர் ?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்து பாரேன்
ஈழத்தில்
தமிழனாய்.


                               -சிவகுமாரன்

3 கருத்துகள்:

 1. very very happy to see your kavithaikal in website. still i want to read more kavithai .All the very best. with love your brother

  பதிலளிநீக்கு
 2. மிக நன்றாக இருக்கிறது.
  இப்படி கவிதை எழுதி என்ன ஆகி விடப் போகிறது ஈழத் தமிழர்களுக்கு?
  ஆக்கபுர்வமாக என்ன செய்யப் போகிறோம்?

  பதிலளிநீக்கு
 3. அருமையான சிந்தனை வரிகள் வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு