ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2010

ஹைகூ கவிதைகள் 5

சேலை கிழிந்தது
மகளுக்கு மகிழ்ச்சி
தாவணி.

ஒழுங்காய் சுத்தமாய்
அழகே இல்லாமல்
குழந்தை இல்லா வீடு.

சுடாதே சுடாதே
அழுதது குழந்தை
பலூன்கள் பாவம்

பேய்வாழும் மரத்தடியில்
ஒய்யார உறக்கம்
வெளியூர்க்காரன்.

குருட்டுப் பிச்சைக்காரனின்
கோணி விரிப்பில்
செல்லாக்காசுகள்.

2 கருத்துகள்:

 1. சிவகுமாரன் கோபத்தில்
  பிள்ளை யாரென சண்டை
  மாம்பழத்தால்...

  பதிலளிநீக்கு
 2. //சேலை கிழிந்தது
  மகளுக்கு மகிழ்ச்சி
  தாவணி//

  Super! :-))

  பதிலளிநீக்கு